புவி வெப்பமயமாதலுக்கு, அதிக அளவிலான கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றம் தான் காரணமாக கூறப்படுகிறது.உலகிலேயே, கார்பன்டை ஆக்சைடை மிகக் குறைந்த அளவில் வெளியேற்றும் நாடு என்னும் சிறப்பினை இந்தியா தான் பெற்றுள்ளது.
இந்தியாவின் மக்கள் தொகை 120 கோடி என்றாலும், ஒவ்வொரு தனிநபருக்கும் 1.7 டன் கார்பன்டை ஆக்சைடு தான் வெளியேற்றப் படுகிறது.இந்தியாவில் இருந்து வெளிப்படும் கார்பன் கழிவுகளின் அளவை, 2020ம் ஆண்டுக்குள் 20 அல்லது 25 சதவீதம் குறைக்க உறுதி எடுக்கப்பட்டு உள்ளது.
ஸ்டாக்ஹோம் நிறுவனம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. அதில் கார்பன் கழிவு களின் அளவை குறைப்பது தொடர்பாக, வளரும் நாடுகள் அளித்துள்ள உறுதிமொழியின்படி பார்த்தால் வளர்ந்த நாடுகளை விட, வளரும் நாடுகள் தான் கார்பன் கழிவை அதிகளவில் கட்டுப் படுத்துகின் றன என்னும் அறிக்கை இந்தியாவை பெருமைப்படுத்துவது போல் உள்ளது.
புவிவெப்பமயமாதலுக்கு இனி எந்த ஒரு நாடும், இந்தியாவை குறை கூற முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
செய்தி: தினமலர்