ஒரு சேதி சொல்லவா……….
ஈழத்தில் உங்கள் மனித இனம்
அழிந்தது போல இந்த மண்னை
விட்டு இந்த உலகத்தை விட்டு
எங்கள் { உங்கள் } சிட்டுக்குருவி இனம்
அழிய போகிறது தெரியுமா…?
இனிமேல் உங்கள் வீட்டு வாசலில்
துள்ளி துள்ளி பறக்க நாங்கள்
வர போவதில்லை உங்கள் மரத்தடியிலும்
உங்கள் கிணத்தடியிலும்
நாங்கள் துள்ளி விளையாட நாங்கள்
வர போவதில்லை எங்களுக்கேல்லாம்
ஒரே ஒரு ஆசை இல்லை இல்லை
கடைசி ஆசை………….
என்றோ ஒரு நாள் நாங்கள் உங்களுக்கு
இரையாகிருப்போம் அந்த
நன்றி உணர்வோடு கேட்கின்றோம்
எங்கோ கலவரம் எங்கோ குண்டு வெடிப்பு
எங்கோ சுனாமி என்று
துடிக்கும் நீங்கள் ஏன் மனிதர்கலே
மனிதனை கொல்லுகிறீர்கள்.
நிறுத்தி கொள்ளுங்கள் இத்துடன்
– selva