சுறா – பாடல் விமர்சனம் நான் நடந்தால் அதிரடி : பேஸ்கிட்டாரின் மெல்லிய உறுமலில் மெலிதாக துவங்கிறது இந்தப்பாடல்.”நான் நடந்தால் அதிரடி, என் பேச்சு சரவெடி” என்று துவங்கும் நவீனின் குரலை ரசிக்க முடிகிறது. விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகரும், ஜனனியும் இணைந்து இந்த டூயட்டை அலங்கரித்திருக்கிறார்கள். ஆனால் பாடலை முழுதாக ரசிக்க முடியாத அளவிற்கு “ட்யூன்” மாற்றம் நடந்திருக்கிறது. தோரணை படத்தில் வரும் “வா செல்லம் வா வா செல்லம்” பாடலின் ட்யூனை அப்படியே உபயோகப்படுத்தி இருப்பதால் இளைய தளபதிக்கு பதில் புரட்சிதளபதிதான் மனதில் தோன்றி போகிறார். more