தமிழ் ஈழம் வேண்டுமா வேண்டாமா? என்பது குறித்த முடிவை தமிழர் விருப்பத்துக்கே விட்டுவிடுவது என்ற நிலையை ஐ.நா. சபை விரைவில் எடுக்கும் என்று தெரிகிறது.
இதுகுறித்த வாக்கெடுப்பு ஒன்றை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடத்துவது குறித்த ஆலோசனைகளை சில நாடுகள் ஐநாவில் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.
இதன் மூலம் வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற ஈழப் போராட்டத்தின் அடிப்படை சாசனத்தை சர்வதேசம் அங்கீகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர் ஆகியவற்றை தனி நாடாக பிரகடனப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்பட்ட வாக்கெடுப்புகளே காரணமாக அமைந்தன.
அதே போல இலங்கையிலும் வாக்கெடுப்பு நடத்துவது குறித்து சில ஆலோசனைகள் துவங்கியுள்ளனர். அவ்வாறு வாக்கெடுப்பு நடந்தால் அதில் பங்கேற்று வாக்களிக்க வெளிநாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
Leave feedback about this