கோ’ வைப்போல் ஆக்ஷன்
“கோ’ வெற்றிக்கு பிறகு ரௌத்திரம் பழகிய ஜீவாவின் “வந்தான் வென்றான்” வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக “நண்பன்’ காத்திருக்கும் நிலையில் கவுதம் மேனன், மிஷ்கின் என நட்சத்திர இயக்குனர்களின் படங்களை ஜீவா கைவசம் வைத்திருக்கிறார்.
.
“வந்தான் வென்றான்’ மற்றும் வரவிருக்கும் படங்கள் பற்றி நடிகர் ஜீவா உற்சாகமாக கூறியதாவது: வந்தான் வென்றான் காதல், காமெடி, ஆக்ஷன் எல்லாம் நிறைந்த படம். உறவுகள் பற்றியும் வலியுறுத்தும் படம். இந்த படத்தில் பணிபுரிவது இனிமையான அனுபமாக இருந்தது.
அடுத்ததாக மிஷ்கினின் முகமூடி, கவுதம் மேனனின் “நீதானே என் பொன் வசந்தம்” படங்களில் நடித்து வருகிறேன். ஒரே மாதிரி படங்களில் நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. “கோ’வுக்கு பிறகு ஆக்ஷன் ஹீரோவாக நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஒரு நல்ல நடிகனாக எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய நடிகனாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
மிஷ்கின் இயக்கும் முகமூடியை பொறுத்தவரை அது அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும். “கோ’வைவிட 5 மடங்கு ஆக்ஷன் என்று சொல்லலாம். 7 சண்டை காட்சிகள் உள்ளன. கவுதம் மேனன் படத்தை பொறுத்தவரை மென்மையான காதல் கதை.
இவ்வாறு கூறும் ஜீவா, நண்பனில் இயக்குனர் ஷங்கர் கீழ் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம் என்கிறார்.
Leave feedback about this